இலங்கையில் கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை மாலை தீவில் அடக்குவது தொடர்பான எவ்வித தீர்மானத்திற்கும் அரசாங்கம் இதுவரை வரவில்லை என அமைச்சரவையின் பிரதி ஊடக பேச்சாளர் Dr ரோமேஷ் பத்திரன இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதே வேலை இலங்கை அரசு சார்பில் கொரோனா உடல்களை மாலை தீவில் அடக்குவதற்கான எவ்வித உத்தியோகபூர்வ கோரிக்கைகளும் மாலை தீவு அரசிடம் முன்வைக்கப்பட வில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாலை தீவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் அப்துல்லாஹ் சாலிஹ் அவர்கள் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் மாலை தீவில் கொரோனா ஜனாஸாக்களை அடக்குவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என தன்னிடம் வினவியதாக சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
