அனுராதபுர மாவட்டம், அழகப்பெருமாகம என்ற முஸ்லிம் கிராமத்தில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாயலின் மதில் சுவர் நிர்மாணத்தின் போது தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த அடையாளங்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிவாயல் காணிக்கு அருளில் உள்ள இடத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க அடையாளங்கள் காணப்பட்டதாகவும், பள்ளிவாயல் மதில் நிர்மாணப் பணிக்காக பெக்கோ இயந்திரத்தினால் சில பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது தொல்பொருள் அடையாளங்களுக்கு சிதைவுகள் ஏற்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டில் குறித்த பள்ளி நிர்வாகிகள் 5 பேர் காணி உரிமையாளர்கள் 2 பேர் பெகோ சாரதி ஒருவர் மற்றும் மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
