Our Feeds


Friday, December 18, 2020

www.shortnews.lk

VIDEO: முஸ்லிம் ஜனாஸாக்களை மாலை தீவில் அடக்கக் கேட்டு பிரச்சினையை சர்வதேசத்திற்கு ஜனாதிபதி கொண்டு சென்று விட்டார் - முஜிபுர் ரஹ்மான் MP

 



கொரோனாவில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை இலங்கையில் தான் அடக்கம் செய்ய வேண்டும். அந்த உடல்களை அடக்கம் செய்வதினால் பூமியின் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று கூறப்படுவது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கைக்கு எதிரானதாகும். இலங்கையில் இருக்கும் மிகச் சிறந்த ஆய்வாளர்கள் கூட அந்தக் கருத்தை ஒப்புக் கொள்ளவில்லை. என இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் இலங்கை அரசு வேண்டுமென நிலத்தடி நீரை காரணம் காட்டி முஸ்லிம்களின் உடல்களை எரிக்கிறது. 


தற்போது முஸ்லிம் உடல்களை அடக்குவதற்கு மாலை தீவு அரசுடன் ஜனாதிபதி பேசியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார். உள்நாட்டு பிரச்சினையில் தற்போது சர்வதேசத்தை தலையிட வைக்கும் வேலையை ஜனாதிபதி செய்துள்ளார். தற்போது எந்தெந்த நாடுகள் இதில் தலையிடும் என்பது தெரியாது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »