முஸ்லிம்களின் கொரோனா ஜனாசா எரிப்புக்கு எதிரான உரிமை போராட்டம் நேற்று 16-12-2020 கண்டி மஹய்யாவ காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள பொது மயானத்திற்கு எதிரில் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் அவர்கள் முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் மற்றும் உடுநுவர பிரதி தவிசாளர் கெளரவ சஃப்வான் ஆகியோர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், இன்னும் பல சகோதர சகோதரிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து இன மக்களையும் இன மத பேதமின்றி அழைக்கிறோம் இந்த போராட்டத்தில் இணையுமாறு. ஹிதாயத் சத்தார் கோரிக்கை விடுத்ததுடன், அரசாங்கம் முஸ்லிம்களின் ஜனாஸாவை வைத்து இனவாதம் செய்வதாக சாடினார்.
