கொவிட் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 278ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 08 பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஆண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட குறித்த நபர், பின்னர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 51 வயதான பெண்ணொருவர் கொவிட் தொற்றினால் இன்று உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
