(எம். செல்வராஜா பதுளை நிருபர்)
பிபில பிரதேசத்தின் படல்கும்புரை பகுதியின் அலுப்பொத்தை முஸ்லிம் கிராமத்தில் கொரோனா தொற்று அபாயம் எதிர்நோக்கப்படுவதாக தெரிவித்து பொதுச் சுகாதாரப் பிரிவினர் தொடர்ச்சியாக 46 நாட்களாக அக்கிராமத்தை தனிமைப்படுத்தி, முடக்கியதாகக் குற்றஞ்சாட்டிய பிரதேச முஸ்லிம்கள் முடக்கத்துக்கு எதிராக நேற்று (21) ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
அலுப்பொத்தை கிராமம் தொடர்ந்து தனிமைப்படுத்தி, முடக்கப்பட்டமையால் தமது வாழ்வாதாரங்களை மேற்கொள்ள பெரும் அசௌகரியங்களை தாம் எதிர்நோக்குவதாகவும் அவர்கள்தெரிவித்தனர்.
இதனையடுத்து அலுபொத்தை கிராமம் சுகாதாரப் பிரிவினரால் உடனடியாக முற்றாக விடுவிக்கப்பட்டது.
