மட்டக்களப்பு கோட்டமுனை மூர் வீதியில் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து 7 தினங்களில் அவரது மனைவியும் கொரோனா தொற்றினால் இன்று வெள்ளிக்கிழமை (22) உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு 6 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 7 தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த நபரின் மனைவி உட்பட 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கபட்டு வந்த நிலையில் முன்னர் உயிரிழந்த நபரின் மனைவி இன்று உயிரிழந்துள்ளார்.
இதேவேளை குறித்த பகுதியான அரசடி கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டு அங்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில் இதுவரை 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
