Our Feeds


Sunday, February 21, 2021

www.shortnews.lk

தற்கொலை தாக்குதல் நடத்த ஸஹ்ரானிடம் பைஅத் - உறுதி மொழியெடுத்த 15 பெண்கள் - வெளியான பரபரப்பு தகவல்

 



ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹரான் ஹஷிமினால் நடத்தப்பட்ட வகுப்புக்களில் கலந்துக்கொண்ட குற்றச்சாட்டில், மாவனெல்ல பகுதியில் கைதான 24 வயது யுவதி, பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.


பயங்கரவாத தடுப்பு பிரிவு நடத்திய விசாரணைகளின் போதே அவர் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

குறித்த வகுப்பில் தன்னுடன் 15 பெண்கள் கலந்துக்கொண்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், குறித்த 15 பெண்களும், தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கான உறுதிமொழியை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த யுவதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மாவனெல்ல பகுதியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் மற்றும் மாவனெல்ல பகுதியில் புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில், குறித்த யுவதியின் தந்தை மற்றும் இரு சகோதர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். (HiruNews)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »