தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 253 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இதன்படி, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 9282 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்
இந்தநிலையில், இன்றைய தினமும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையினால், மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
மேலும், வைத்தியசாலைகளுக்கு மாத்திரம் செல்ல அனுமதி வழங்கப்படும் என அவர் கூறுகின்றார்.
இதேவேளை, தேசிய அடையாளஅட்டை நடைமுறை இன்றும் மற்றும் நாளைய தினங்களில் செலுப்படியாகாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
