இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 1,635 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 126,995ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.