Our Feeds


Saturday, May 15, 2021

www.shortnews.lk

இன்றும் 2 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள் - அனைவரும் புதுவருட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்

 



இலங்கையில் மேலும் 585 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

இதற்கமைய இன்று இதுவரையில் 2,371 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 140,456 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,352 பேர் இன்று (15) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 117,220 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 921 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »