Our Feeds


Wednesday, May 26, 2021

www.shortnews.lk

நேற்றும் 32 வயது ஆண் உட்பட கொரோனா தொற்றில் உயிரிழந்த 28 பேர் தொடர்பான முழு விபரங்கள் இணைப்பு

 



இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.


அதனடிப்படையில் நேற்று (25) 05 கொவிட் மரணங்கள் இடம்பெற்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார்.

மேலும், மே மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை கொவிட் நோயாளர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மே 18 ஆம் திகதி ஒருவரும், மே 19 ஆம் திகதி 04 மரணங்களும், மே 20 ஆம் திகதி 02 மரணங்களும், மே 21 ஆம் திகதி ஒருவரும், மே 22 ஆம் திகதி 02 மரணங்களும், மே 23 ஆம் திகதி 04 மரணங்களும், மே 24 ஆம் திகதி 09 மரணங்களும் பதிவாகியுள்ளன.

அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,269 ஆகும்.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »