(செ.தேன்மொழி)
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த கொவிட் -19 தொற்றுக்குள்ளான நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.
குறித்த நபர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் 071-8591579 என்ற இலக்கத்தை தொடர்புக் கொண்டு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கேட்டுக் கொண்டார்.
தப்பிச் சென்ற மொஹம்மட் ரிகாஸ் கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நபர் ஒருவர் நேற்று (25)செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். அம்பாறை வரிப்பதான்சேனை பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் ரிகாஸ் என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
இவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். அவர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் 071-8591579 என்ற இலக்கத்தை தொடர்புக் கொண்டு கொள்ளுபிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரிவிக்க முடியும் என்றார்.
