கொவிட் நோய் அறிகுறிகள் மற்றும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் சில சந்தர்ப்பங்களில் ஒரே விதமாக காணப்படுகின்றன என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
அதனால், ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், வீடுகளிலிருந்து அது குறித்து ஆராயாமல், வைத்தியர்களின் ஆலோசனைகளை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றது.
காய்ச்சல், உடல் வலி ஆகிய அறிகுறிகள் டெங்கு மற்றும் கொவிட் ஆகிய இரு நோய்களுக்குமான அறிகுறிகளாக காணப்படுகின்றன என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்தியர் டொக்டர் இந்திக்க வீரசிங்க தெரிவிக்கின்றார்.
தனக்கு இருப்பது கொரோனாவா அல்லது வேறு வைரஸ் காய்ச்சலா என்பது தொடர்பில் வீடுகளிலிருந்து தீர்மானத்தை எடுக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொள்கின்றார்.
ஏதேனும் நோய் அறிகுறிகள் இருக்குமாக இருந்தால், உடனடியாக வைத்தியர் ஒருவரை நாட வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.
