Our Feeds


Monday, May 31, 2021

www.shortnews.lk

இன்றும் மூவாயிரத்தை நெருங்கிய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை

 



இலங்கையில் மேலும் 1,351 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

இன்று மாலை வெளியான கோவிட் அறிக்கையின்படி 1,531 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று இதுவரையில் 2,882 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 185,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 151,740 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இவர்களில் 1,441 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »