Our Feeds


Monday, May 31, 2021

www.shortnews.lk

தயா கமகேவின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மத்திய அதிவேக வீதி உடன்படிக்கையை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி

 



மத்திய அதிவேக வீதியின் மீரிகம முதல் பொத்துஹெர வரையான இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளில் தாமதம் ஏற்பட்டமையை அடுத்து, முன்னாள் அமைச்சர் தயா கமகேவிற்கு சொந்தமான ஒலிம்பஸ் நிறுவனத்தின் உடன்படிக்கையை முடிவுக்கு கொண்டு வர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பகுதியின் நிர்மாணப் பணிகளை விரைவில் நிறைவு செய்யுமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்ட போதிலும், அந்த பகுதியின் நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் தாமதம் ஏற்படுத்தப்பட்டதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.

இதையடுத்தே, தாம் இந்த தீர்மானத்தை எட்டியதாகவும் அவர் கூறுகின்றார்.

வீதி நிர்மாணத்திற்கான நிதி தாமதம் இன்றி வழங்கப்பட்ட போதிலும், வீதியின் நிர்மாணப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அதனால், திட்டமிட்ட தினத்தில் வீதியை திறக்க முடியாது போனதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »