எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுக்கின்றது.
இவ்வாறு ஏற்படும் சடுதியான அதிகரிப்பை, சுகாதார தரப்பினால் தாங்கிக்கொள்ள முடியாது என அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் செனால் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.
இதனால், எதிர்வரும் இரு வாரங்களுக்கு நாடு தழுவிய ரீதியில் முழுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
