சினோவெக் கொவிட் தடுப்பூசிக்கான தொழிற்சாலையை கண்டி – பல்லேகெலே பகுதியில் ஆரம்பிக்க யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
கொவிட் தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்கும் வகையில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு, அண்மையில் அனுமதி கிடைக்கப் பெற்றது.
சீனாவின் சினோவெக் பயோடெக் நிறுவனம், கெலும்லயிஃப் சயன்சஸ் நிறுவனம் மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுதாபனம் ஆகியன இணைந்து இந்த தடுப்பூசியை தயாரிக்க திட்டமிட்டுள்ளன.
கொவிட் தடுப்பூசியை சர்வதேச நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு ஏற்பட்டுள்ள சிரம நிலைமையை கருத்திற் கொண்டு, உள்நாட்டிலேயே மருந்து உற்பத்தியை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
