Our Feeds


Friday, May 21, 2021

www.shortnews.lk

கடந்த நான்கு நாட்களில் 46 சடலங்கள் நல்லடக்கம்.

 



கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் பணிகள் ஓட்டமாவடி-மஜ்மா நகர்ப்பகுதியில் இடம்பெற்று வருகின்றன.



குறித்த இடத்தில் நேற்று (20) மாத்திரம் 8 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம். நௌபர் தெரிவித்தார்.


அந்த வகையில், கடந்த திங்கள் முதல் வியாழன் வரையான 4 நாட்களில் 46 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதில் முஸ்லிம், கிறிஸ்தவ, இந்து, சிங்கள ஆகிய இனங்களைச் சேர்ந்தோரின் உடல்கள் இவ்வாறு நல்லடக்கம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று வரை குறித்த பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சடலங்களின் மொத்த எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »