அம்பாறை − ஒலுவில் பகுதியில் திருமண பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹஷிமிற்கு பாதுகாப்பு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் 55 வயதான இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2017ம் ஆண்டு முதல் சஹரானுக்கு, குறித்த சந்தேகநபர் பாதுகாப்பு வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
