சீனாவில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
7.4 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் பதிவான நிலநடுக்கத்தின் தாக்கம், இந்தியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தின் பின்னர் பல பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
