கொவிட்−19 தொற்றினால் நாளொன்றில் பதிவான அதிகூடிய உயிரிழப்புக்கள் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
கொவிட் வைரஸ் தாக்கம் காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மே மாதம் 2ம் திகதி முதல் 20ம் திகதி வரையான இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக 1132 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தோரில் 30 ஆண்களும், 14 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தோர் தொடர்பான விபரம்
- 71 வயதுக்கு மேற்பட்ட 23 பேர்.
- 61 − 70 வயதுக்குட்பட்ட 11 பேர்
- 51 − 60 வயதுக்குட்பட்ட 7 பேர்
- 31 − 40 வயதுக்குட்பட்ட 2 பேர்
- 21 − 30 வயதுக்குட்பட்ட ஒருவர்
