அங்கொடை பகுதியிலுள்ள முதியோர் இல்லமொன்றிலிருந்த அனைவருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, முதியோர் இல்லத்திலிருந்த 27 முதியோருக்கும், 2 அதிகாரிகளுக்கும் இவ்வாறு கொவிட் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார அதிகாரி தெரிவிக்கின்றார்.
இந்த முதியோர் இல்லத்தில் இருந்த முதியவர் ஒருவர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில், அங்குள்ள அனைவருக்கும் PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு நடத்தப்பட்ட பரிசோதனைகளில், அனைவருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்வதில் சிரம நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதனால், குறித்த முதியோர் இல்லத்தை தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றி, அவர்களுக்கு அங்கேயே சிகிச்சைகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த முதியோர் இல்லத்திலுள்ள ஒருவர் மாத்திரமே வெளியில் செல்வதாகவும், அவரினாலேயே முதியோர் இல்லத்திலுள்ள அனைவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
