நிகழ்வுகள் ஏற்பாட்டாளர் சந்திமால் ஜயசிங்க மற்றும் பிரபல சிங்கள நடிகை பியூமி ஹன்சமாலி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்ட 25 பேர் வரை கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர்களில் 12 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி கொழும்பு 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிறந்தநாள் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்திமால் ஜயசிங்க மற்றும் பிரபல சிங்கள நடிகை பியூமி ஹன்சமாலி ஆகியோர் இன்று (31) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
