Our Feeds


Monday, May 24, 2021

www.shortnews.lk

வீட்டில் பதிவாகும் கொரோனா மரணங்கள் அதிகரிக்கலாம்! - சடலங்களை களஞ்சியப்படுத்த குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் தயார் நிலையில்

 



(எம்.எப்.எம்.பஸீர்)


அடுத்துவரும் நாட்களில் கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் பதிவாகும் மரணங்கள் அதிகரிக்கலாம் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், அவ்வாறு வீடுகளில் மரணிப்போரின் மரண விசாரணைகள் நிறைவுறும்வரை, அச்சடலங்களை களஞ்சியப்படுத்தி வைக்க குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் பல தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான சட்ட வைத்திய நிபுணர் அஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.


தற்போது கொரோனாவினால் மரணிப்போரின் சடலங்களால் வைத்தியசாலைகள் நிரம்பவில்லை என சுட்டிக்காட்டிய அவர், அடுத்துவரும் நாட்களில் ஏற்படக் கூடிய எச்சரிக்கையுடனான நிலைமையை கையாள இவ்வாறான குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


‘உண்மையில் வீடுகளில் ஒரு மரணம் நிகழ்ந்தால், குறித்த சடலமும், வைத்தியசாலைகளில் பதிவாகும் மரணங்களின் போதான சடலங்களும் வைத்தியசாலை பிரேத அறையிலேயே வைக்கப்படும்.


அவ்வாறான நிலையில் வீடுகளில் பதிவாகும் மரணங்கள் அதிகரித்தால் பிரேத அறையில் இடப்பற்றாக்குறை பிரச்சினை ஏற்படலாம். எனவே தான் குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள், அவ்வாறான சடலங்கலை களஞ்சியப்படுத்தி வைப்பதற்காக தயார் செய்யப்பட்டுள்ளது.’ என விஷேட சட்ட வைத்திய நிபுணர் அஜித் தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »