Our Feeds


Monday, May 24, 2021

www.shortnews.lk

மருந்து என தெரிவித்து ஹெரோயினை கொண்டுச் சென்ற நபர் கைது!

 

 நோயாளி ஒருவருக்கு மருந்து எடுத்துச் செல்வதாக தெரிவித்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இங்கிரிய கெட்டகெடல்ல பொலிஸ் வீதித் தடையில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

34 வயதுடைய ஹொரணை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,வீதித் தடையில் வாகனத்தை பொலிஸார் நிறுத்திய போது, நோயாளி ஒருவருக்கு மருந்து எடுத்துச் செல்வதாக சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் மோட்டர் வாகனத்தை பொலிஸார் பரிசோதித்த போது அதிலிருந்த 5 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »