Our Feeds


Monday, May 24, 2021

www.shortnews.lk

கரும் பூஞ்சை நோய் இலங்கைக்கு புதிதல்ல!

 

 இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ள சிலருக்கு கரும் பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளமை தற்போது சமூகத்தில் பெருமளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளதாக விசேட வைத்தியர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அம்பாறையில் ஒருவருக்கு கரும் பூஞ்சை நோய் இருப்பதாக அடையாளம் காணப்பட்டு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் இது தொடர்பான அச்சம் ஒன்று ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை வைத்திய பரிசோதனை அறிக்கையின் படி, 2019 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கரும் பூஞ்சை நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு 42 பேருக்கும், 2020 ஆம் ஆண்டு 24 பேருக்கும் மற்றும் 2021 ஆம் ஆண்டு இதுவரையில் 24 பேருக்கும் கரும் பூஞ்சை நோய் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இருப்பினும் இவர்களில் எவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் இந்த கரும் பூஞ்சை நோய் இலங்கைக்கு புதிதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.​ நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்த ​நோய் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »