(எம்.எப்.எம்.பஸீர்)
அனைத்து மாகாண சுகாதார செயலர்கள், சுகாதார அமைச்சின் கீழ்வரும் அனைத்து நிறுவங்களினதும் பிரதானிகள், அனைத்து மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், பிரதேச சுகாதார பனிப்பாளர்கல் மற்றும் அனைத்து சுகாதார ஊழியர்களையும் விழித்து ‘ ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுதல்’ எனும் தலைப்பில் அவர் அனுப்பியுள்ள அறிவித்தலிலேயே இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் சுகாதார கொள்கைகளை விமர்சிப்பதன் ஊடாக சுகாதார அமைச்சு மற்றும் ஏனைய சுகாதார நிறுவனங்கள் தொடர்பில் மக்களின் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படுவதாகவும் அதனை கருத்தில் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவித்தலில் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இனிமேல் அரசாங்கத்தின் சுகாதார கொள்கைகளை விமர்சித்து கருத்து வெளியிடும் சுகாதாரத்துறை அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு எதிராக தாபன விதிக் கோவையின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
