Our Feeds


Thursday, May 20, 2021

www.shortnews.lk

சுகாதார விதிமுறைகளை மீறி நடந்த திருமணம் - பலருக்கு கொரோனா தொற்று - யாருக்கும் நிவாரண பொருட்கள் தரமாட்டோம் என அதிகாரிகள் அறிவிப்பு.

 



கோவிட் 19 நெருக்கடி நிலைமை தலை தூக்கியுள்ள நிலைமையில் சுகாதார தரப்புக்களின் அறிவுரைகளை அலட்சியம் செய்து திருமண வீடு நடத்தியவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


காவத்தை நாவலகந்த பிரதேசத்தில் அனுமதி பெறாமல் திருமண நிகழ்வு ஒன்றை நடத்தியதன் மூலம் அதில் கலந்துக் கொண்ட பலருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்றியுள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து இதில் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலை மற்றும் தனிமைப்படுத்தல் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரண பொருட்கள் எதுவும் வழங்கப்படாது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


விதிமுறைகளை மீறி நடந்த திருமணம் ஒன்றால் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று... அவர்களுக்கு நிவாரண பொருட்கள் தரமாட்டோம் என அதிகாரிகள் தெரிவிப்பு

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »