Our Feeds


Thursday, May 20, 2021

www.shortnews.lk

வங்காள விரிகுடாவில் காற்றழுத்தம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை.

 



வடக்கு அந்தமான் கடல் மற்றும் கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் மே 22 ஆம் திகதி ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளது என வளிமண்டளவியல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


இது 23 ஆம் திகதி தீவிரமடைய வாய்ப்புள்ளது , மேலும் 24 ஆம் திகதிக்குள் சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது.

இது வடமேற்கு நோக்கி நகர்ந்து 26ஆம் திகதி ஒடிசா அருகே – மேற்கு வங்காள கடற்கரைகளை கடக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மே 21 முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரை கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »