ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் பெயரிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் உள்ளக தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக பிரபல சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுடன், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்; நடத்திய பேச்சுவார்த்தையின் போது, அதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி கடந்த பாராளுமன்றத் தேர்தல் ஒரு ஆசனத்தை கூட பெறாத நிலையில், மொத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை அந்த கட்சிக்கு கிடைத்திருந்தது.
இவ்வாறு கிடைக்கப் பெற்ற தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைக்கு இதுவரை எவரும் பெயரிப்படாத நிலையில், அந்த வெற்றிடத்திற்கு ரணில் விக்ரசிங்க பெயரிடப்படவுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
