குறைந்தது சுமார் இரண்டு வாரங்களுக்கேனும், மக்களை வீடுகளுக்குள் முடக்க வேண்டும் என ஆரம்ப சுகாதாரம், தொற்று நோய் தடுப்பு, கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவிக்கின்றார்.
அவ்வாறு இரண்டு வாரங்களுக்கு மக்களை வீடுகளுக்குள் முடக்கினால் மாத்திரமே, இந்த வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என அவர் கூறுகின்றார்.
தான் ஒரு வைத்தியர் என்ற விதத்தில், இதனையே தான் பரிந்துரை செய்வதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த தொற்று நோயை மறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியான தகவலை அவர் நிராகரித்துள்ளார். (TC)
