கொவிசீல்ட் தடுப்பூசிகள் இலங்கையில் விற்பனை?
எஸ்ட்ரா சேனேகா கொவிசீல்ட் தடுப்பூசிகளை 5000 ரூபாவிற்கு விற்பனை செய்யும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எஸ்ட்ரா சேனேகா கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாம் கட்டத்தை செலுத்துவதற்காக 6 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகின்ற நிலையிலேயே, இவ்வாறு தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படுதாக தெரிவிக்கப்படுகின்றது.
