Our Feeds


Friday, May 14, 2021

www.shortnews.lk

அடுத்த சில வாரங்களில் இலங்கையில் கொரோனா வேகமாக பரவும்! ஆதாரத்துடன் ரணில் வெளியிட்ட சிறப்பு அறிக்கை

 



கொரோனா தொற்றுநோயால் பொருளாதாரத்திற்கு ஏற்படும் சேதத்தை சரிசெய்ய முடியும். ஆனால் மக்கள் உயிரை திருப்பிப் பெற முடியாது.


ஆகவே இந்த நேரத்திர் மக்களின் உயிரைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் கடமையாகும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் இந்த சிறப்பு அறிக்கையை இன்று வெளியிட்டார்.

அடுத்த சில வாரங்களில் கொரோனா தொற்றுநோய் இலங்கையில் வேகமாகப் பரவும் என்று உலக சுகாதார அமைப்பின் கொழும்பு அலுவலகம் மற்றும் இலங்கை மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர் என்று விக்ரமசிங்க கூறினார்.

நாட்டை முழுவதும் மூடுவதற்கு மருத்துவர்கள் அழைப்பு விடுத்தால் அரசாங்கம் அவ்வாறு செய்ய வேண்டும் என்று கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முன் இந்த தருணத்தில் நோய் பரவுவதை தடுப்பதே முதல் வேலையாகும் என்று ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »