Our Feeds


Saturday, May 29, 2021

www.shortnews.lk

வீட்டிலிருந்து தப்பிய கொரோனா நோயாளியை அடையாளம் காண உதவுங்கள் - பொலிசார் கோரிக்கை

 



பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெகசின் வீதி பொரளை என்ற விலாசத்தை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா நோயாளராக இனங்காணப்பட்ட பின்னர் அவரது வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


28 வயதுடைய குறித்த இளைஞருக்கு கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நேற்றைய தினம் பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் சுகாதார பிரிவினருடன் குறித்த நபரை சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றபோது அவர் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபரின் புகைப்படம் மேலே பதிவு பெற்றுள்ள நிலையில் குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் கீழுள்ள இலக்கங்களுக்கு அறியத்தருமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி -071 85 91 587

பொரளை பொலிஸ் நிலையம் - 011 26 94 019

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »