Our Feeds


Tuesday, May 18, 2021

www.shortnews.lk

பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதலை ஆதரித்த செக் குடியரசின் தூதரை வெளியேற்றக் கோரி குவைத்தில் அரபுகள் ஆர்பாட்டம்.

 



Czech - செக் குடியரசின் குவைத்துக்கான தூதர் தனது இன்டர்க்ராம் பக்கத்தில் சியோனிச பயங்கரவாத இஸ்ரேலுடன் துணை நிற்பதாக இஸ்ரேலிய கொடியுடன் பதிவிட்டிருந்த ஒரு பதிவு தொடர்பில் குவைத்தில் சர்சை உண்டாகியுள்ளது.


செக் குடியரசு தூதுவருக்கு எதிராக குவைத் பொது மக்கள் மற்றும் குவைத் வாழ் பாலஸ்தீன மக்கள் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.


ஆரம்பத்தில் ஆர்ப்பட்டத்திற்கு தடைவிதிக்கபட்ட நிலையில் குறுகிய சில நேரத்திற்குப்பின் அனுமதியும் கொடுக்கப்பட்டது 


எதிர்ப்பு ஆரம்பமானதை தொடர்ந்து செக் குடியரசு தூதுவர் மார்டின் டுவோர்க் தனது பதிவை நீக்கி மன்னிப்பு கோறியுள்ள நிலையில் மக்கள் அவற்றை ஏற்காத நிலையில் அவரை வெளியேற்றவேண்டும் என்ற கோஷம் எழுப்பப்பட்டு வருகின்றது.


எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் தலைமையிலான மற்ற வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் செய்த ஒப்பந்தங்களை இதுவரை குவைத் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குற்றிப்பிடத்தக்கது


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »