பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமாக தீவிரவாத தாக்குதலுக்கு சவுதி அரேபியா கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல்சவுத் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் பாலஸ்தீனர்களின் உரிமைகளை அப்பட்டமாக மீறுகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அவசரமாக செயல்பட முன்வர வேண்டும் என சர்வதேச சமூகத்திற்கு சவுதி அரேபியா அழைப்பு விடுப்பதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை மூலமான தனது எல்லையை விரிவு படுத்திக் கொள்ளும் திட்டத்தை நிறுத்தவும், இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் இருதரப்பு சமாதான பேச்சுவார்த்தைகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பான OIC யின் அவசர கூட்டம் இணையம் வழியாக நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
