Our Feeds


Sunday, May 16, 2021

www.shortnews.lk

கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சை அளிப்பது பிரச்சினையாகும் - PHI அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

 



கொரோனா தொற்றாளர்களை தமது வீடுகளிலேயே தங்க வைத்து, சிகிச்சை அளிக்கும் பட்சத்தில், அது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.


நோய் அறிகுறிகள் இல்லாது, கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படும் நோயாளர்களை தமது வீடுகளிலேயே தங்க வைத்து சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.


எனினும், இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய அடிப்படை வசதிகள் இல்லாமையினால், அது பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கின்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »