Our Feeds


Sunday, May 16, 2021

www.shortnews.lk

அபாயத்தை நோக்கி தொடர்ந்தும் நகரும் இலங்கை - அவசர தேவையை எதிர்நோக்கியுள்ள நாடாக ஐ.நா தெரிவிப்பு

 



கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையின் ஊடாக, இலங்கை மிக மோசமான நிலைமையை நோக்கி நகர்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.


இலங்கையில் கொவிட் தொற்றாளர்கள் அதிகளவில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


அதேவேளை, இந்தியாவின் தற்போதைய நிலைமை குறித்தும் தாம் அதிக அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் கூறுகின்றார்.


மேலும், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் அவசர தேவைகளை எதிர்நோக்கியுள்ள நாடுகள் என அவர் குறிப்பிடுகின்றார்.


தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதே, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரே வழி என அவர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »