Our Feeds


Monday, May 31, 2021

www.shortnews.lk

மாணவர்களுக்கான பாடங்களை TV யில் ஒளிபரப்பும் GURUGEDERA/ குருகுலம் TIMETABLE வெளியீடு - TIMETABLE இணைப்பு

 



குருகுலம் கல்வி ஒளிபரப்புக்கான புதிய நேரசூசி வெளியிடப்பட்டுள்ளது. 

தேசிய கல்வி நிறுவகம் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டம் கடந்த ஒரு வருடமாக இயங்குகின்றது. 

இம்முறை பல புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அழகியல் பாடங்கள், இரண்டாம் மொழி பாடங்கள் மற்றும் தொழிநுட்ப  பாடங்கள் குறிப்பிடத்தக்கவை.

முடியுமானவரை ஒரு வகுப்புக்கான பாட ஒளிபரப்புக்கு வாரத்தின் ஒவ்வொரு தினமும் குறிப்பிட்ட நேரத்தையும் வழங்க முயற்சித்து நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. 

உதாரணமாக திங்கள் காலை 8.00 மணிக்கு தரம் 8 க்கான பாடம் ஒளிபரப்பாகும். திங்கள் காலை 9 மணிக்கு தரம் 9 க்கான பாடங்கள் ஒளிபரப்பாகும் வகையில் இது திட்டமிடப்பட்டுள்ளது. 


கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் இவ்வீடியோக்களைத் தயாரிப்பதற்கான கற்பித்தல் பணியில் ஈடுபடுகின்றனர். 

அத்தோடு இந்த பாடங்களின் வீடியோக்கள் அனைத்தும் தேசிய கல்வி நிறுவகத்தின் யுடிப் அலைவரிசையில் பதிவேற்றப்பட்டுள்ளது. அவை பாட வரிசை அமைப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. 

முடியுமானவரை அவற்றைப் பார்த்து கற்றல் சூழலைத் தொடர ஒத்துழைப்போம். 









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »