Our Feeds


Thursday, June 10, 2021

www.shortnews.lk

பிறந்து 08 நாட்களேயான கைக்குழந்தை கொரோனா தொற்றில் உயிரிழப்பு.

 



கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 8 நாட்களேயான சிசுவொன்று, கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளது.


கடந்த மே மாதம் 25ம் திகதி பிறந்த இந்த சிசுவை, 27ம் திகதி வைத்திசாலையிலிருந்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

வீட்டிற்கு அழைத்து சென்ற சிசுவிற்கு, காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, சிசு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிசுவிற்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில், சிசுவிற்கு கொவிட் வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பளை – புஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த சிசுவின் தந்தை அல்லது தாயிடமிருந்தே, சிசுவிற்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

எனினும், சிசுவின் தந்தை மற்றும் தாய் ஆகியோருக்கு இதுவரை PCR பரிசோதனைகள் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே, குறித்த சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »