நிகழ்வுகள் ஏற்பாட்டாளர் சந்திமால் ஜயசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரமொன்றில் கலந்து கொண்ட மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 12 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறி கொழும்பில் உள்ள நட்சத்திர விருந்தகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் நிகழ்வுகள் ஏற்பாட்டாளர் சந்திமால் ஜயசிங்க மற்றும் பிரபல சிங்கள நடிகை பியூமி ஹன்சமாலி ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
