Our Feeds


Thursday, June 3, 2021

www.shortnews.lk

14ம் திகதிக்கு முன், பயணக் கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்படுமா? - அமைச்சர் பதில்.

 



எதிர்வரும் 14ம் திகதி வரை நீடிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாட்டு காலப் பகுதிக்குள், தற்காலிகத்திற்கேனும் பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவது குறித்து இதுவரை எந்தவித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.


எதிர்வரும் 14ம் திகதி அதிகாலை 4 மணி வரை இந்த பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமலில் இருக்கும் என அவர் குறிப்பிடுகின்றார்.

எதிர்வரும் 7ம் திகதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டை, எதிர்வரும் 14ம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »