Our Feeds


Thursday, June 3, 2021

www.shortnews.lk

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.

 



தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மரக்கறிகளின் விலை கணிசமானளவு வீழ்ச்சியடைந்துள்ளது.


நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மரக்கறி லொறிகள் இன்றைய தினம் பொருளாதார மத்திய நிலையத்திற்கு வந்துள்ளதாக தம்புள்ளை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால், கடந்த வாரத்தை விடவும் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது

லீக்ஸ், போஞ்சி, கரட், போன்ற மலைநாட்டு மரக்கறிகளின் மொத்த விலை ஒரு கிலோ ரூ 150 இற்கும் 250 இற்கும் இடையில் காணப்பட்டதுடன், கத்தரிக்காய், பயற்றங்காய், பாகற்காய், வெள்ளரிக்காய் போன்ற மரக்கறிகளின் மொத்த விலை ஒரு கிலோ கிராம் ரூ.100 இற்கும் 150இற்கும் இடைப்பட்டதாக காணப்பட்டது.

இதேவேளை பச்சைமிளகாய் ஒரு கிலோ கிராம் 190 க்கு 200 க்கும் இடையில் காணப்பட்டதுடன், தக்காளி ஒரு கிலோ கிராம் ரூபாய் 120 க்கும் 150 க்கும் இடைப்பட்ட விலையில் காணப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »