ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தவிசாளருக்கு இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் ஓட்டமாவடி பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் சபை உறுப்பினர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை இடம்பெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
