Our Feeds


Tuesday, June 15, 2021

www.shortnews.lk

2021 A/L & புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு.

 



நாட்டில் தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையால் 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதில் தாமதம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


தற்போதைய நிலைமை தொடர்பில் சுகாதாரத் தரப்பினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து கலந்துரையாடல்களை நடத்தி பரீட்சையை நடத்தும் தினம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொரோனா தொற்று நிலைமை காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் ஆங்கில மொழி வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சாதாரண தர பரீட்சையின் செயன்முறை பரீட்சைகளை நடாத்தும் தீர்மானம் தொடர்பில் நாளை (16) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »