நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை, எதிர்வரும் 21ம் திகதி வரை நீடிக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் உயர்மட்டத்தை மேற்கோள்காட்டி, தமிழன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாட்டை நீடிக்க வேண்டும் என அரசாங்கத்திடம், சுகாதார பிரிவினர் கோரியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
14ம் திகதி வரை பயணக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், கொரோனா பரவல் குறைவடையாதுள்ளதை கருத்திற் கொண்டே இந்த முடிவை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாடு அமலில் உள்ள காலத்திலும், கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறையாமல், ஆபத்தான நிலைமையை நோக்கி தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பயணக் கட்டுப்பாட்டு அமலில் உள்ள காலப் பகுதியில், மக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துக்கொள்வதால், நாளை (07) முதல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மிக கடுமையாக நடைமுறைப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தமிழன் பத்திரிகை செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
