மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரில் ஒரு யுவதியின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 61 ஆவது படைப்பிரிவின் 611 வது பிரிகேட்டின் 8 ஆவது இலங்கை சிங்க படையினர் இன்று (5) காலை (5) காலை மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தை மீட்பதற்காக மாவனெல்ல தேவநாகல பகுதிக்குச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்தும் பெய்யும் மழைக்கு மத்தியில், மண்சரிவில் புதையுண்டிருந்த 23 வயதான யுவதியின் சடலத்தை மீட்டு மாவனெல்லை வைத்தியச்சாலைக்கு எடுத்துச் சென்றனர்.
காணாமல்போன அவரது தாய் (56), தந்தை (57) மற்றும் சகோதரர் (29) ஆகியோரைக் கண்டுபிடிப்பதற்காக மண்சரிவு ஏற்பட்ட பகுதி மற்றும் அதன் சூழவுள்ள பகுதிகளில் படையினர் தொடர்ந்தும் தேடல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடர்கின்றனர்.
படையினர் கிராமவாசிகளுடன் ஒன்றிணைந்து அந்த அனர்த்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தொடர்கின்றனர்.
இதேவேளை, வரக்காபொல அல்கம பகுதியில் இன்று (5) காலை ஏற்பட்ட சிறிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மற்றொரு வீட்டின் மீட்புப் பணிகளில் 8 ஆவது சிங்க படையினர் ஈடுபட்டுள்னர்.

பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, 61 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே, 611 வது பிரிகேட் தளபதி, பிரிகேடியர் ஜனக உடோவிட்ட, மற்றும் 8 ஆவது சிங்கப் படையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் இந்த தேடல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.