இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 2,912 பேரில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் குறித்த காலப்பகுதியில் 490 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் கொழும்பில் மாத்திரம் 49,737 பேர் அடையாளம் காணப்படுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
