Our Feeds


Friday, June 18, 2021

www.shortnews.lk

இலங்கையில் முதன்முதலாக சிங்கத்திற்கு கொரோனா - மேலும் 2 மிருகங்கள் கொரோனாவில் மரணம்

 



இலங்கை, தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கம் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


மேலும் குறித்த மிருகக்காட்சி சாலையில் இருந்த வரிக்குதிரை மற்றும் நீர்யானை ஆகியவையும் கொரோனா தொற்று காரணமாக அண்மையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்தே குறித்த மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கத்துக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

‘தோர்’ என்ற பாதிக்கப்பட்ட சிங்கம், 2012 ல் கொரியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

இதற்கு இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த சிங்கத்துடன் வசிக்கும் மற்றைய நான்கு சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று உள்ளதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

இது போன்ற சம்பவங்கள் மற்ற நாடுகளில் பதிவாகியிருந்தாலும், ஒரு விலங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமையும், இரு விலங்குகள் கொரோனாவால் உயிரிழந்துள்ளமையும் இலங்கை அறிவித்தது இதுவே முதல் முறையாகும். (TC)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »